தாய்ப்பால் தின சிறப்பு கவிதை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*தாய்ப்பால் தின*
*சிறப்பு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இன்னும்
ஆதி மனிதன்
அடையாளங்களை
இழக்காமல்....
அப்படியே
இருப்பது
தாய்ப்பால் மட்டுமே...!!

ஐ எஸ் ஐ முத்திரைக்கு
அனுப்பி வைக்காதது
இவ்வுலகில்
தாய்ப்பால் ஒன்றுதான்...!!

தாய்மடி தான்
குழந்தைகளுக்கு
முதல் பள்ளிக்கூடம்...
அங்கு பிரம்மால்
வரவழைக்க முடியாத
பண்பாடு
கலாச்சாரம்
நாகரிகத்தை
இங்கு பிரம்மன்பாலால்
வரவைக்க முடியும்
என்பதால்தால்.........!!

பூமி அன்னையின்
மார்பு மலையிலிருந்து
வழியும்
அருவிபால் போல்...
அன்னை மார்பில்
கசியும் பாலும்
நோய்களைத் தீர்க்கும்
பல மூலிகைகளைச்
சுமந்து வருகின்றது.....!!!

அன்னை
பாலூட்டும் போது
கிடைக்கும்...
அன்பும்
அரவணைப்பும்
ஸ்பரிசமும்
குழந்தைகளுக்க
மனிதப்பண்புகளையும்
சேர்த்தே ஊட்டுகிறது....!!

வள்ளுவன் வடித்த
முப்பாலையும்
ஒன்று சேர வடித்ததுதான்
தாய்ப்பால்...!!!

போர் வீரர்களுக்கு
வெளியே அணிவிக்கப்படும்
கவசம் போல்...
குழந்தைகளுக்கு
உள்ளே அணிவிக்கப்படும்
கவசம் தான்
தாய்ப்பால்.......!!!

குழந்தை தளிர்களுக்கு
குறைந்தபட்சம்
ஆறு மாதம்....
அதிகபட்சம்
இரண்டு ஆண்டு வரை
தாய்ப்பாலை அளியுங்கள்....
தளிர்களின் ஆன்மாவேர்கள்
உடல் மண்ணில்
ஆழமாக ஊடுருவிச் சென்று
அறிவு கிளைகளை
மூளை மரத்தில் விரித்து
விருட்சமாகட்டும்....

தளிர் மரமாகும் போது
இயற்கை சீற்றங்களை
எதிர்த்து போராடும்
வலிமையையும்
ஆற்றலையும் பெற்று
நிமிர்ந்து நிற்கும்.....!!

சாகா வரம் கொடுக்கும்
அமுதத்தை விட...
தாய்ப்பால்
உயர்வானது தான்....
ஏனென்றால்?
அமுதம்
உண்டவனைத்தான்
பாதுகாக்கும்.....
ஆனால்
தாய்ப்பால்
கொடுத்த அன்னையையும்
சேர்த்தே அல்லவா
பாதுகாக்கின்றது....?

தாய்ப்பால் தினத்தை
போற்றுவோம்....!
தவறாமல் தாய்ப்பால்
ஊட்டுவோம்....!

💐 தாய்ப்பால் தின நல்வாழ்த்துகள், 💐

இவண்
*கவிதை ரசிகன் குமரேசன்*


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுதியவர் : கவிதை ரசிகன் (1-Aug-22, 5:56 pm)
பார்வை : 126

மேலே