தாலாட்டு

மரகத மயிலே ஆராரோ
மாணிக்க சிலயே ஆராரோ
மயக்கும் எழிலே ஆராரோ

சிறிய விழிகள் சோர்ந்து கிடக்குது
சீக்கிரம் துயில்வாய் ஆராரோ

தரணி ஆள்வாய் ஆராரோ
தங்க நிலவே ஆராரோ
தழைக்கும் தமிழே ஆராரோ

சீனி வழியும் செந்தூர இதழ்கள்
சோர்ந்தது போதும் ஆராரோ

இனிக்கும் கரும்பே ஆராரோ
இன்ப வரமே ஆராரோ
இமயம் தொடுவாய் ஆராரோ

இனிய அழுகை இசைத்து போதும்
இயல்பாய் துயில்வாய் ஆராரோ

- விஷ்ணு

எழுதியவர் : விஷ்ணு சீனிவாசன் (30-Jul-22, 11:14 pm)
சேர்த்தது : Vishnu
Tanglish : thaalaattu
பார்வை : 2827

மேலே