நளினி டீச்சர்
டீச்சர் வணக்கம்...
நீங்கள் எனக்கு எழுத்தறிவிக்காவிடில்
நான் இவ்வுலகில் முகத்தில் இரண்டு புண்களோடு அலைந்திருப்பேன்...
ஈன்ற என் தாய்
எனக்கு புறவுலகை காட்டினாள்
நீங்கள் தான் எனக்கு அறிவுலகை காட்டினீர்கள்...
உலகில் உள்ள தெய்வங்கள்
எதுவும் பேசுவதில்லை.
டீச்சர் நீங்கள் மட்டுமே
இவ்வுலகில் நான் கண்ட
பேசும் தெய்வம்...
நான் கல்லாக இருந்தேன்
களிமண்ணாக இருந்தேன்
உங்கள் பார்வைப் பட்டதால்
இன்று வண்ணமிகு சிலையாக
நிலையாக உள்ளேன்...
மாணவர்களுக்கு
டீச்சர்களின் பங்களிப்பில்லாத
ஒரு வாழ்க்கையை
கற்பனைச் செய்து பார்த்தேன்
உலகம் அடர்ந்த காடாகவும்
மனிதர்கள் அதில்
கொடும் மிருகங்களாக
தெரிகிறது எனக்கு...
எல்லோரும் நதியில் நீந்தி
புனிதமடைவார்கள்
நானோ உங்களின் மதியில்
நீந்தி புனிதமடைந்தேன்...
மாதா பிதா குரு தெய்வம்
என வரிசைப்படுத்தினார்கள்
ஆனால் என் குருவாகிய நீங்கள்
எனக்கு மாதாவாகவும் பிதாவாகவும் தெய்வமாகவும் என் வாழ்க்கையில்
வழிகாட்டியுள்ளீர்கள்.
என்றும் தங்களின் கீழ்படிந்த மாணவன்
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்.
.