கிணல்

'சணல்' என்று பெற்ற மகளுக்குப்
பெயர் வைத்து மகிழ்ந்திடும் பெற்றோர்
'மணல்' என்ற பெயரைப் பெருமிதமாய்
மகனுக்குப் சூட்டி மகிழும் பெற்றோர்!
நான் பெற்ற பெண் குழந்தைக்கு
தமிழர் யாரும் தம் குழந்தைக்குச் சூட்டாத
பெயரைச் சூட்டப் பேரவா கொண்டு
'கிணல்' என்ற பெயரைச் சூட்டினோம்.
பொருள் இல்லாப் பெயர்கள் இந்தியில் பல
இந்திப் பெயர் போல பொருளற்ற பெயரை
உருவாக்கித் தம் பிள்ளைகளுக்குச் சூட்டி
மகிழ்ந்திடும் தமிழர்கள் இலட்சக்கணக்கில்
'கிணல்' எங்கள் உருவாக்கம் அல்ல
போட்டித் தேர்வொன்றில் வெற்றிபெற்ற
மாணவியின் பெயர் தன் சாதிப்பெயரோடு
நாளிதழ் ஒன்றில் வெளியான பெயர்.
இப்போது சொல்லுங்கள் தற்காலத் தமிழர்
வழக்கப்படி தானே பெயர் சூட்டியுள்ளோம்
"'கிணல்' ஸ்வீட் நேம்" என்று சொல்லுங்கள்
கேட்கும் எங்கள் உள்ளம் இனிக்கட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Manal = Bird. Arabian, Indian feminine name
Sanal = Vigorous. Indian origin. Masculine name.
Kinal = meaningless Hindi name.