தாரம் என்னும் சங்கிலி கொடுக்கவா 555
***தாரம் என்னும் சங்கிலி கொடுக்கவா 555 ***
என்னுயிரே...
பேசும் உன் விழிகளுக்கு
கரு மை பூசியதேன்...
அழகு
ரேகைகள் கொண்ட ...
உன் இதழ்களுக்கு
வண்ண சாயம் எதற்கு...
உன் கொழு கொழு
ஆப்பிள் கன்னத்தில்...
ஒரு திருஷ்டி
போட்டு வைத்தால் என்ன...
பிரமிப்பூட்டும் உன்
அழகு கழுத்துக்கு...
தங்க
சங்கிலி கொடுக்கவா...
தாரம் என்னும்
சங்கிலி கொடுக்கவா...
குறுகிய
உன் நேர் வகிட்டில்...
நீயாக குங்குமம் எப்போது
வைத்து கொள்வாய்...
உன்னை அணு அணுவாய்
ரசிக்கும் போதெல்லாம்...
என்னை அறியாமல் எனக்குள்
ஆசைகள் ஆர்பரிக்குதடி...
பதிலை நான் தெரிந்துகொண்டே
உன்னிடம் கேள்வி கேட்கிறேன்...
என் செவிகளுக்கு இதமாக
பதில் சொல்லப்போவது...
என்னவள்
நீயாக இருப்பதால்...
ஒருமுறை வாய்மலர்ந்து
விடை கொடுப்பாயா...
கேள்விகளுக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும் உயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***