கூழாங்கல்

உப்புத் தண்ணிப் பட்டு பட்டு
அரிச்ச பாறகணக்கா யெம் - மொகம்
இனிப்புத் தண்ணில நீந்தியே வாழ்ந்த
கூழாங்கல் போல அவள் - மொகம்...!

கூழாங் கல்லப் போல - வளவளப்பா
அந்த கருவாச்சி தேகம் பளபளங்குது,
ஒளிவீசும் அவள் மொகம் - பளபளப்பா
பார்த்து யெம் மனசு குலுகுலுங்குது...!

கல்லாட்டம் தேகம் படச்சவ - மனசோ
பஞ்சு கணக்கா இருக்கும் வெள்ளையா,
வெள்ளையா இருக்க கருவாச்சி - மனசோ
துடிக்குதிந்த பாறையப் பாத்து கொள்ளையா...!

அவ அழகான மனசுக்காக - இந்த
காளையும் காத்துக் கெடந்த வருஷமா,
கடைசில அவவெள்ள மனச - இந்த
பாறைக்கு தாரை வாத்தா பரவசமா...!

பாவிமக மனசுப் பூரா - உறஞ்சு
கெடக்கு யென்நெனப்பு, அதப் பாத்த
இந்தப்பாறை மனசும் மெழுகா - கரைஞ்சு
போச்சு யென்னப் பெத்த ஆத்தா...!

எழுதியவர் : கவி பாரதீ (4-Aug-22, 10:49 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 82

மேலே