சொல்ல துடிக்குது உன் கண்கள் 555

***சொல்ல துடிக்குது உன் கண்கள் 555 ***


ப்ரியமானவளே...


உன் வட்ட முகத்தில்
குட்டி யாக இரு கண்களும்...

உன் கொழு கொழு
கன்னங்களும்...

ரேகைக்கொண்ட
உன் செவ்விதழ்களும்...

என்னிடம் எதையோ
சொல்ல துடிக்குதடி...

நீயோ
தடுத்து
நிறுத்துகிறாய்...

மிருதுவாய் இருக்கும்
உன் மாநிற மேனிக்கு...

எங்கிருந்து வாசனை
திரவியம் வாங்குகிறா
ய்...

முன்னும் பின்னும்
கோவில் சிலைதான் நீ...

உன்னை
போல் வேறொருத்தி...

இனி பிரம்மன்
படைப்பானோ தெரியவில்லை...

இறைவன் படைத்த
பெரிய உலகில்...

நான்
அமைத்துக்கொண்ட
உறவு நீ மட்டும்தான்...

நீயும்
நானும் சேர்ந்தால்...

நமக்கான புது உறவை
நாம் படைக்கலாம் நாளை.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (4-Aug-22, 9:09 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 453

மேலே