அடையாளம் இல்லாம வந்தா
அடையாளம் இல்லாம வந்தா?
@@@@@@@@@
நீ பெரிய ரவுடிதான். ஆதாரம் நெறையக் குடுத்த நேத்து. நானும் நம் கட்சியில் உனக்கு நகரத் துணைத் தலைவர் பதவி தருவதாக உறுதி குடுத்தேன். நீ அடையாளத்தை எல்லாம் நீக்கிட்டு வந்திருக்கிறயே மீனுவாயி முனியா.
@@@@
ஐயா நான் கட்சியின் நகரத் துணைத் தலைவராகப் போறதலே கொஞ்சம் நாகரிகமா இருக்கட்டுமேனு காது வலையம் மூக்கு வலையத்தை எடுத்தேனுங்க. புயல்ல சாயும் மரத்தைப் போல தலையில் இடப்பக்கமா தொங்கிட்டு இருந்த முடி தலையில பின்னியிருந்த சடையை எல்லாம் நீக்கச் சொல்லி முடி வெட்டிட்டு வந்திருக்கிறனேனுங்க.
@####
அதுதான்டா மீனுவாயா நீ செஞ்ச பெரிய தப்பு. உன்னை மன்னிச்சு கட்சில உனக்கு உறுதியளித்த பதவியைத் தர்றேன். மூணு மாசத்துக்குள்ள உன்னோட ரவுடி அடையாளம் இருக்கணும். அப்பத்தான் மக்கள் உன்னைப் பார்த்தா பயப்படுவாங்க. நம்ம கட்சிக்காரங்களும் உன்னைக் கட்சி நிர்வாகியாக ஏத்துக்கவாங்க. நாளை காலைல பத்து மணிக்கு வா. உனக்கு பதவி பிரமாணம் செய்யறேன்.
@@@@@
ரொம்ப நன்றிங்க தலைவரே.