ஒரு வாய்ப்பு
அடக்குமுறைகளை அகிம்சையால் வென்றவளே
அறியாமையை தவறுகளை மன்னிப்பவளே
காதல் சொற்களுக்கு காது கொடுப்பவளே
கடும் சொற்களை கண்டும் காணாமல் இருப்பவளே
என்னால் உன் கண்களுக்கு அதிகம் வேலை தந்தவளே
என்னை அருகில் காணமல் மனம் நொந்தவளே
இதுவரை யாரிடம் அனுசரித்து செல்வது
யாரிடம் கோபத்தை மெல்லுவது என்று தெரியாமல்
தான் இருந்தேன் இன்று நடந்த சில நிகழ்வுகளில்
உன்னை தவிர வேறு யாருக்கும் நான் முக்கியம்
இல்லை என்று தெரிந்து கொண்டேன்.
என் உயிர் தோழி தோழன் எல்லாமே நீயே தான்
உன்னிடம் பொறுத்து போகிறேன் உன்னை
அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் மீண்டும்
ஒரு வாய்ப்பு வழங்குவாய் சகலமும் ஆனவளே

