தக்கோலம் தக்கோலப் பொட்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாண்டுசுரம் போகும் பகரிற் பலஞ்சேருந்
தீண்டுமுப யாசியமுந் தீருங்காண் - நீண்டதொரு
தாதுவிர்த்தி யாகுந் தளர்ந்தமல முங்கட்டுங்
கோதகலுந் தக்கோலங் கொள்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் பாண்டு, சுரம், இருவித வாதங்கள் இவை நீங்கும்; பலம், வீரிய விருத்தி, மலக்கட்டு இவை யுண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-22, 8:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே