மனதிற்குள் ஒரு வேஷமும்..!!
நட்பு என்பது
நேரத்தை போக்குவதற்காக
சேரும் பந்தம் அல்ல
மனங்களை பகிர்ந்துகொள்ளும்
உன்னதமான உணர்வு புரிந்துகொள்...!!!
மனதிற்குள் ஒரு வேஷமும்
வெளியில் ஒரு பாசமும் காட்டி
நட்பென்ற போர்வையில்
நடிப்பதுதற்கு பெயர் நட்பல்ல ''கூத்து''...!!!
கவலைகள் எதுவென்றாலும்
ஓடிவந்து ஒரு வார்த்தை
பேசிவிட்டால் கவலைகள் தீருமே
அப்படி ஒரு நட்பை ஏமாற்ற
எப்படி உன்னால் முடிந்தது...!!!
மரியாதை கருதி
தெரிந்த விடயங்களை
உன்னிடம் கேட்காது
மனதிற்குள் வைத்திருந்ததால்
நினைக்காதே நாம் ஒன்றும்
தெரியாத முட்டாள்கள் என்று...!!!
எங்களை வெற்றியாக
ஏமாற்றிவிட்டாய் என்று
நீ நினைப்பாயானால் உன்னைப்போல்
அதிமுட்டாள் இவ்வுலகில் யாரும் இல்லை
அதை முதலில் நீ புரிந்துகொள்...!!!
முகம்தனில் தெரியும்
சோகம்தனை பாரத்து எதும் பிரச்சனையா
என கேட்டு உன்னை ஆறுதல் படுத்தும் நட்பை
இனி நீ எங்கு சென்று தேடுவாய் ???
உண்மை சொல்லி நட்பை இழந்தாலும்
பொய் சொல்லி நட்பை ஜெயிக்க நினைக்காதே
இனி கிடைக்கும் நட்புக்காச்சும்
அர்த்தம் தெரிந்து பழகிக்கொள்..!!