பெண்ணின் அவலம்

காத்து வந்த கற்பும் பூட்டிக்
காத்துவந்த அழகும் பறிபோக
தெரு ஓரத்தில் போர்த்திய கந்தலுக்குள்
ஒடுங்கி கிடக்கும் பெண் அவள்
சிறகெல்லாம் நீக்கப்பட்ட கோழிபோல்
ஈன ஸ்வரம் எழுப்பி காத்திருக்கிறாள்
உதவிக்கு யார்வருவர் என்று
பாவம் கற்பழிக்கப்பட்ட அபலை அவள்
கற்பழித்தவன் யாரோ சுவடு தெரியாது
எங்கோ ஓடி விட்டான்
இப்படி தினம் தினம் எத்தனையோ
பெண்கள் மீளா அவதிக்குள் ,,,,,,,,,,,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் (11-Aug-22, 10:51 am)
Tanglish : pennin avalam
பார்வை : 54

மேலே