குண்டா அண்டா
முதல் மகப்பேறு
இரட்டைக் குழந்தைகள்
ஆண் குழந்தையும்
பெண் குழந்தையும்.
நாங்கள் பச்சைத் தமிழர்கள்
இந்திப் பெயர்களைச் சூட்டுவதே
தற்காலத் தமிழரின் நாகரிகம்
சோதிடரின் கணிப்பு பிடித்துப்போனது.
பெண் குழந்தைக்கு
'குண்டா' பெயரானது
தேன் சொட்டும்
இந்திப் பெயர்.
ஆண் குழந்தைக்கு
பாட்டியின் விருப்பப்படி
'அண்டா' பெயரானது
அவரது உருவாக்கம்.
இந்திப் பெயர்களே
தமிழருக்கு இனிய பெயர்கள்.
கலப்படத் தமிழ் பேசுவோருக்கு
செம்மொழிப் பெயர்கள் பிடிக்காது.
'"அண்டா'வுக்கு பொருள் உண்டா"?
"இந்திப் பெயர் என்றிடுக
'அண்டா' ஸ்வீட் நேம்" என்று
வாழ்த்துவார் பலரும்" என்றார் பாட்டி.
பாட்டி சொல்லைத் தட்டாதவர்கள்
"'குண்டா', 'அண்டா' பெயர்களை
பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தைக்கும்
சூட்டி பெருமிதம் அடையும் தமிழரானோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kunda = Musk, Jasmine. Unisex Indian name
Anda = Tamil word referring to a vessel.