அற்புத வித்தே ஆடி பெருக்கே
கர்மவீரரே !
காரியங்கள் வெல்பவரே !
கிஞ்சித்தும் சோரா மனத்தவரே !
கீதையின் பாதையே !
குவலயம் வலம் வரும் கோவே !
கூடி நிற்போரைத் தாங்கும் ஆலம் விழுதே !
கொற்றவன் உம் குடைக்கீழ் ஆனந்த மழையே !
கோபுரம் போல் உம் கீர்த்தி பெருகுக !
கெட்டி விட்ட தமிழ்த் தேர்
ஏறி வலம் வருக ! வசந்தம் தருக !
கேதார கெளலம் ராகம் போல
இன்னிசையாய்த் துலங்குக !
கெளமாரக் கடவுளாய்
உமைப் போற்றி நிற்போம் என்றும் !
வாழ்க ! நீடூழி தமிழ் போல
இளமையாய் இனிமையாய் வாழியவே !
மகராசன் ஜெகம் போற்ற
வாழ்க ! வெல்க !