ஆடிப்பெருக்கு

ஆடிப் பெருக்கு !!
-----'''-------'''---

ஆடிப்பெருக்கு ஆடியிலே அணைமீறும் காவிரி//

காவிரியில் மிதந்துவரும் கனிவகையோ தேன்சுவை //

தேன்சுவையும் நீர்வளமும் தேற்றிடுமே தமிழகம் //

தமிழகத்து வரலாற்றில் தனித்துவமாய்ப் பொன்னிநதி //

பொன்னிநதி தீரத்திலே புதைந்திருக்கும் நாகரிகம் //

நாகரிகம் கண்டவர்கள் நம்தமிழர் பரம்பரை//

பரம்பரையாய் இந்தநதி தமிழ்நாட்டின் சொத்து //

சொத்தினையே காத்திடுவோம் சோழர்களின் வித்து //

வித்துகளே விளைபயிராய் விருட்சங்களாய் உயரும் //

உயரும்எம் உயிர்நதியின் உன்னதமே ஆடிப்பெருக்கு!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (11-Aug-22, 12:13 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 54

மேலே