வாழ்க்கையெனும் ஓடந்தான் வழங்கும் பாடம் - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
மூழ்கடிக்கும் துயரமதை முந்தி நின்று
..முற்றிலுமே விலக்கிடுவோம் முயற்சி செய்தே!
தாழ்வுமிலா வாழ்வினையே தகவாய் வாழ்ந்து
..தயவுடனே இன்பமதைத் தாமே கொள்வோம்!
பாழ்செயலாம் பாதகத்தை பாரோர் யார்க்கும்
..பரிந்துநின்றே செய்யாதீர் பகர்ந்தேன் இன்றே!
வாழ்க்கையெனும் ஓடந்தான் வழங்கும் பாடம்
..வண்ணமயம் ஆக்கிடுமே வாழ்ந்து பார்ப்போம்!
- வ.க.கன்னியப்பன்