நற்றமிழ் கவிதைகள் நாளும் தருவோம் எழுத்தில்

பொற்கொல்லர் போலும் நாங்கள் சொற்கொல்லர்
பொற்றமிழ் பொதிகைத் தமிழ்சொல் எடுத்து
பொற்றாமரை குளத்து வற்றாதமிழ் புலவர்போல்
நற்றமிழ் கவிதைகள் நாளும்தரு வோம்எழுத்தில் !

----கவிதை அமைந்த பாவினம் கலிவிருத்தம்
அடி எதுகை அழகுடன் மோனை தரும் அழகும்
இக்கவிதையின் சிறப்பு .

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-22, 10:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே