துவளும் மனைவியைத் தாயைப் போலவே காத்திடும் கணவன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

ஆயொ டப்பனுஞ் சொல்வதைக் கேட்பினும்
நோயும் வந்தால் துவளும் மனைவியைத்
தாயைப் போலவே தாங்கியே காத்திடும்
நேயங் கொண்டநல் நெஞ்சன் கணவனே.

- வ.க.கன்னியப்பன்

எ.கா:

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ. 4

- அவையடக்கம், கம்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-22, 10:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே