மின்னலன்ன விழிகளில் மேவுங் காதலால் - கலித்துறை

கலித்துறை
(கூவிளங்காய் விளம் மா விளம் விளம்)
(1, 3, 5 சீர்களில் மோனை)

புன்னகைக்குக் கவிதையாய்ப் பொய்கள் வழங்கினேன்
..பொலிந்திட;
மின்னலன்ன விழிகளில் மேவுங் காதலால்
..மிளிர்கிறாய்!
மின்னிடையைக் கரங்களால் மெல்ல அணைத்திட
..மென்மையாய்க்
கன்னமதில் நாணமுங் கனிவாய்ச் சிவப்பதைக்
..காண்கவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-22, 12:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே