தோகைவிரித்தாடும் பொன்மயிலே 555

***தோகைவிரித்தாடும் பொன்மயிலே 555 ***


பொன்மயிலே...


மாலைநேர பொழுதில் மழையும்
மலைசார்ந்த இடத்தில்...

மயில்கள்
தோகைவிரித்தாடும் வேளையில்...

பொன்மயிலே
நீ ஏன் அங்கு சென்றாய்...

நீயும்
தோகைவிரித்தாட சென்றாயோ
...

காய்ந்து கிடைக்கும் பூமியில்
உன் பாதம் பட்டதும்...

மண்ணில் புதைந்த விதைகளை
எல்லாம்
விருட்சமாய் வளருமடி...

வளர்ந்து நிற்கும்
தென்னையும் பாளைவிடும்...

உன்
பதம் பட்டதால்...

பாறைகளும் சிற்பமாகும் சிலையாக
நீ நடந்து செல்வதை கண்டால்...

பாறைகளிலும் பூக்
கள் மலரும்
உன் பார்வை பட்டால்...

வரப்பில்
நடை போடும் உன்னோடு...

வாழ்க்கை
நடை
போட காத்திருக்கிறேன்...

உன் வாய்மலர்ந்து
நீ சம்மதம் சொன்னால்...

என் வாசலில்
வாழைமரம் கட்டுவேன்...

வாய்மலர்ந்து சொல்லடி
வயலோடு விளையாடுபவளே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (12-Aug-22, 4:49 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 197

மேலே