அருப்-பு

அடியே அருப்புக்கோட்டைக்காரி
உன் ஊர் பேரில் பாதியை
நீ பெற்ற மகனுக்கு வைத்து
"அருப்பு, அருப்பு"னு கூப்பிடறயே
பிறந்து வளர்ந்த ஊர் மீது
உனக்கு எல்லையற்ற பாசமா?

பாட்டி, பாட்டி கொள்ளுப் பாட்டி
நான் வாழ்வது நாட்டின் தலைநகரில்
பிறந்த ஊர் பாசம் இருந்தாலும்
வாழும் ஊர் தானே எனக்கு எல்லாம்.

நீங்கள் கூறுவது போல 'அருப்பு'
என் பையன் பெயர் அல்ல.
'அருப்' என்ற சமஸ்கிருதப் பெயரே
என் பையனின் அழகான பெயர்.

பிறந்த ஊர் பிள்ளைகளின் பெயர் எல்லாம்
இந்திப் பெயர்களாய் இருக்கும் போது
நாட்டின் தலைநகரில் வாழும் நான்
என் பிள்ளைக்குச் தமிழ்ப் பெயரைச் சூட்டிட
எனக்கென்ன பைத்தியமா பிடித்துள்ளது?

காலத்தின் கோலம் தமிழரின் அடையாளம்
இந்தி சமஸ்கிருதப் பெயர்களும்
அர்த்தமில்லாமல் பெயர்களை உருவாக்கி
பிள்ளைகளுக்குப் பெயர்களாக்குவதே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@###@@

Arup = Full of joy, Blissful, Always happy, Cheerful.
Sanskrit unisex name.

எழுதியவர் : மலர் (15-Aug-22, 12:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 35

மேலே