நிலவு நான் குமுதம் நீ
நிலவின் முத்தத்தில் மகிழ்ந்த அல்லியின்
மொட்டு அழகாய் இதழ்கள் விரித்ததுவே
நிலவாய் உனக்காக காத்திருக்கிறேன் இங்கே
நான் உந்தன் அதரத்தில் முத்தம் தரவே
நான் நிலவு எந்தன் குமுதம் நீயென்றே