உன் விழிகளும் பேசுதடி 555

***உன் விழிகளும் பேசுதடி 555 ***
ப்ரியமானவளே...
உதடுகள்
சண்டையிட்ட போதும்...
உன் விழிகள் காதல்
சுமந்து கொண்டு இருக்கிறது...
வார்த்தைகள் பல இருந்தும்
உள்ளம் மௌனமானது...
குழிகள் கொண்ட
உன் கன்னத்தில்...
எத்தனை
காதல் மொழிகள்...
காதல் மொழிகளை ருசிக்க
ஆசையடி உன் கன்னத்தில்...
நீ பார்க்கும் காதல்
பார்வையில் உணர்ந்தேன்...
உன்
விழிகளும் பேசுமென்று...
உனக்கு
வேர்க்கும் போதெல்லாம்...
உன்னை முத்தமிட்டு கொண்டே
அனைத்துக்கொள்ள வேண்டும்...
என்
கேள்விகள் புரிந்தும்...
சில
நேரத்தில் புரியாதவளாய்...
நீ கண்சிமிட்டி
கேட்கும் போது...
உன்
காதுமடலை மெல்ல தழுவி...
ரகசியமாக
சொல்ல ஆசையடி...
கத்திரி வெயிலில் நீயும்
நானும் நனையவேண்டும்...
நம் காதல்
முத்த மழையில்.....
***முதல்பூ.பெ.மணி.....***