நீர் இருந்தால் மீன் உண்டு நீ இருந்தால் நீர் ஆதாரமே இல்லை

அள்ள குறையாத அமுதே;
ஆறு கடல் குளம் குட்டை வயலென்றே அடைந்துவிட்டாய்
ஆசையாய் ஓடி.
எத்துனை நிறங்கள் எத்துனை வகைகள்
எங்கிருந்து பிறந்தாய்
இத்தனை அழகாய்

துள்ளி துள்ளியே குதித்து அள்ளி தெளித்தாய் அழகை;
குடை விழிப் பெண்ணின்
கண்னைக் குடைந்தாய்
நடை வழிப்பயணமாக
உடையாய் செதிலை உடுத்தி
தடையின்றி நதியொடு நீரில் நடந்தாய்
விடைபெற்றே விதிவழிப் பயணமாய் விருந்தானாய்;
காயம் காய்ந்தும் கருவாடானாய்
கங்கணம்கட்டியே கருவாடையும் விட்டு வைக்கவில்லை மனிதன்;


பிடித்திட துடிதுடித்து நின்றாய்
தூண்டிலில் பட்டே துள்ளி விட்டாய்;
விண்ணில் பாய்ந்ததும் நீயோ;
விண் நட்சத்திரமாக காய்ந்ததும் நீயோ

தண்ணீரைக் குடித்தாய்
தண்ணீரையே குடிலாய்
தத்தளித்தே வாழ்ந்தாய்

எத்துனை துடிதுடிப்பு
எத்துனை தவிதவிப்பு

என்றோ ஒருநாள்
எவன்கையில் சிக்குவோம்
என்ற தவிப்பு

நீர் இருக்கும் வரை நீந்தியே பயணித்தாய்;
தண்ணீரை விட்டு தாண்டி வந்தே தரை கல்லறையில் விழுந்து உயிர் நீத்தாய்;

கொடுத்திட்ட இறைவன்,
வதைத்திட வாலைத்தந்தானோ
வந்திட்ட மனிதன் வலைவீசியே
வதைத்ததும் ஏனோ
அற்பப் புழுவின்மீது ஆசைப்பட்டு
ஆயுலை மடிக்க தூண்டிலுக்கு இரையானாய்.

பிடிபட்ட உன்னை
பிணம்மென்று நினையாது
பித்து பிடித்தே தின்றதும் ஏனோ


இரசிக்கத் தெரியாத இரசிகயத்தை மறந்து
நரம்பில் கம்பியை தொடுத்து
கவ்விடச் செய்து உன் வாயை பிளந்திட விட்டனர்.
தவிப்பது நீயும் தண்ணீரில் மிதந்திடவே.

கண்ணாடி பாட்டில், தொட்டியில் புகுந்தாய் கண்கவர் மீனாக காட்சி பொருளானாய்;
தொல்லை பல கண்டாய்
பார்வை பொருளானாய்;

தொட்டியில் புகுந்தாய் அழகாய் சட்டியில் புகுந்தாய் சுவையாய்;
பாதகனின் பசிக்கு இரையானாய்;
தொட்டியில் நிறைந்து கிடப்பது நீரோ
நீ வடிக்கும் கண்ணீரோ;

அழகை ரசிப்பவனுக்கு உன்னை அடிமையாக வைக்கத்தான் தெரியும்;
இவனை சிறை கைதியாய் அடைக்க வரம் பெறு வராகனனே;

அடுத்த பிறவியிலாவது,
அருவாள் பல்லை வரமாய் பெறு;
அறுத்து அடித்து ஓடிடலாம்
முள்ளாய் உடம்பை பெறு உன்னை உணவாக்க வரும் மனித புழுவை குத்தியே கிழித்து விடு;

மீனே மீண்டும் உயிர்பெறு
தரையிலும் நீந்திடு;
மீனைஉயிர் வாழ விடு;
உணவா(க்)குவதை தடு;

மானிடனே நீர் இருந்தால் மீன் உண்டு
நீ இருந்தால் நீர் ஆதாரமே இல்லை.

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (18-Aug-22, 5:51 pm)
பார்வை : 455

மேலே