வந்த தென்றல் தந்த மழைநீர்

வந்த தெனறலோ, தவழ்ந்த மேகமோ
துள்ளி விளையாடிய சாரலோ;
சொட்டிய தேளலோ;
கட்டிய இருலோ;
காண வந்த உதயமோ;
கண்ணாமூச்சி ஆட்டமோ;
தத்தி விளையாடிய பசும் சோலையோ;
தவழ்ந்து வந்த கருமேகமோ; சுத்தி வந்த சுகமான ஈர மழைமேகமோ;
இசைத்திட்ட பறவைகலோ;
இலையை நனைத்த மழைத்துளிகலோ;
சுகமான தருனமோ;
சுமை என்று நினைக்காத பசும் புற்கலோ;
தாகமோ தாங்கிய மோகமோ;
தயங்கியே வந்த தாபமோ
வான் வீதியில் இருந்து வந்த மழையே,
வசந்தத்தை தந்த தென்றலோ
தேடி வந்த தென்றலுக்கும் தேனாய் சொட்டிய மழைக்கும் என்ன உறவோ;
சுற்றியே திரிந்தாள் சுமந்திட்டு வந்தாள்;
தேடியே வந்தாள்;
தென்மேற்குத் திசை நோக்கி,
ஓடியே வந்தாள் ஊதிய காற்றாக;
சுகமான ஈர மழைமேகமோ;
விட்டகாத்து பொதிகை உச்சியில் இருந்து விடுபட்டு விரட்டியே வந்தாள்;
தொட்டிடத் துடித்த கருங் கூந்தலாய்;
வீதியெல்லாம் விரைந்தது கூத்து;
வந்த காத்து வாடைக்காத்து;
வாலிப வயதை வருத்திய வசந்த காத்து;
மனதில் எடுத்தது இன்ப ஊத்து;
வான்ணீரை சுமந்தேவந்து, மண்ணீராய் ஒன்றென கலந்து விட்டாய்;
மேகத்தை உடைத்து விட்டாய்;
மோகத்தை நனைத்து விட்டாய்;
உயிர் ஜீவனாய் மண்ணுடன் கலந்து விட்டாய்;
உடையை அவிழ்த்து நனைத்தும் விட்டாய்;
உதிரத்தை சொட்டிவிட்டாய்; உணர்ச்சியை ஊட்டி விட்டாய்;
நால் வகைத்திக்கையும் வளைத்து விட்டாய், வண்ணக் கருமேகமாக;
பாடிய குயிலும் பட படத்திட
ஆடாத மயிலும் ஆசையை தீர்த்து ஆடிட;
பறவைகளின் கூப்பாடு;
பசும் புல்லின் ஆர்ப்பாட்டம்;
பஞ்சார புவியின் பசி தீர்க்க வந்த பாச மழையே;
வாச மழையே; வான் மழையே;
நேசிப்போம் நாங்கள் நெஞ்சாற;
ஏந்திய நீரை எங்கோ கொடுத்து விட்டு
தூங்கிய பயிரை வதைத்திட வந்ததாய்
தூவிய சாரலாய்;
துவண்டே வந்தாய் ஆதவன் விழுந்த திக்கெல்லாம்;
அமைதியாய் தூவினாய் பூமழையாக;
3 மாதமும் முழுதாய் அடித்த
தென்கிழக்கு காற்று ,
தேனிக்குற் புகுந்து,
தேதி குறித்திட வந்தது;
வந்த காத்தும் வசந்தமாய்த்
திரிந்திட
ஓடிய காற்று ஒடித்தது மனதை
கெடுத்தது உறவை;
புதைத்தாள் அழகை
புதைந்தாள் பயிரின் உயிராய்
விரைந்த நீருடன்
வீற்றே விளையாடி வந்தாள்
தவழ்ந்த நீரில் தத்தளித்த உறவில்
தாவியே வந்தாள், தடுமாறிய மனதுடன்
தவழந்தே வந்தாள்;
வந்த தென்றல் வந்திட,
வசந்த விழாவை ஏற்றிட,
வயல்களும் பச்சை ஆடை உடுத்திட,
ஆடைகளை தாக்கியும், தூக்கியும்,
அள்ளியும், இழுத்தும்,
இன்ப விளையாட்டை ஆட்டிவிட்டாள்;
என்னென்று சொல்வேன்,
என் மனம் துள்ளக் கண்டேன்;
என்னையே நொந்துவிட்டேன்
ஏன் நான் பயிராகவில்லை என்று;
பதித்த உதடு பரிதவித்து நிற்க,
மேக ஆடையையும் கலைந்துவிட்டாள்,
அள்ளியும் அணைத்து விட்டாள்,
சரமாறி கொடுத்த முத்தங்கள் கோடி;
கொட்டியே மழைநீராய் ஓடி;
வெட்டிய வெட்கம் வெடித்து சிதற;
கொட்டியது மழைதான் குடகு பக்கம்;
விட்டதோ மோகம், விடுபட்ட மேகமும்;
வெட்கத்தைவிட்டு தொட்டதே வானம்,
தொலைதூர திசையெல்லாம்.
வந்த மேகம் வாயில் புகுந்திட வாய்விட்டுச் சிரித்து விட்டாள் வண்ண மிகு மலையரசியாள்;
திரிந்த மேகங்கள் திரவமாய் கரைந்திட;
காடு மேடு கழனி என்று கண்ட இடங்களில் கட்டழகை அவிழ்த்தாள்;
கொட்டிட்ட மேகத்திற்கு,
தினம் தினம் திருமணம்;
நித்தமும் இருள் மயக்கம்;
நீடித்ததோ உன் மயக்கம்;
வாழ்த்திட வந்த பயிர்கள்,
வாயடைத்து போனது;
மோக வலையில் வீழ்ந்தது;
மோதித்தான் தீர்த்தது கருமேகம்;
விரட்டியே ஓடியது ஒரு மேகம்;
கொட்டியே தீர்த்தது மறு மேகம்;
மின்னல் வெட்டியே விரைந்ததும் மேகம்;
இவள் வேசியல்ல,
வேட்கைத்தீயை தூண்டிய தாசியும் அள்ள;
படைத்தும் விட்டாள்
பலகோடி உயிர் ஜீவன்களை;
புவியின் பசியையும் தீர்த்து விட்டாள்;
வந்தவள் விருந்தானாள் விழுந்தே மண்ணுக்கு
விரைந்தே வடகிழக்கு காற்று தொடர
திசை மாறிய இவள்,
இசைத்தது வங்கக் கடலில்;
அடியெடுத்தும் வைத்தது தமிழகத்தில்,
கீழ்திசையில் புகுந்தே இவள்
களவும் கண்டாள்;
மழை மங்கை இவள் வந்து விட்டாள் சொர்க்கமடி;
கொட்டியே வதைத்து விட்டாள் துக்கமடி;
மறந்தும் மறைந்து விட்டாள் துக்கமும் மரணமுமடி
கொட்டாமல் போனால் கோபமடி;
எட்டாமல் போனது ஏனடி;
தவமிருந்து வந்தவளே;
தன்னலம் இன்று தந்தவளே;
வந்த கோபம் எதற்கு;
போதும் போதும்,
தரணியை நனைத்து விடு;
தனியாத தாகத்தைத் தீர்த்தும் விடு;
மழையாய் பொழிந்துவிடு;
மனதை குளிர வைத்துவிடு;
உன் கடமையை செய்துவிடு;
விசும்பில் பிறந்து வந்து புவியில்
உயிர் ஜீவன்களை காத்திடு

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (18-Aug-22, 6:10 pm)
பார்வை : 46

மேலே