கண்ணன் கீதம்

கண்ணன் கீதம்
--------------------------

குழந்தைக் கண்ணனின் இனிய முகம்
கண்டால் அழகு கனியும் அந்த
நீலகமல முகம் கண்டால் அந்த
மலரும் கொவ்வைச் செவ்வாய் இதழ்
கண்டால் சிறு தோளில் விழும்
சுருள் முடி கண்டால் முடிமீது
அழகாய் அமர்ந்த மயிலிறகு கண்டால்
விரி கமலம் அவன் விழிக்கண்டால்
அவன் அதரம் சிந்தும் சிரிப்பைக்
கண்டால் கண்டதுமே சிந்தைக் கவரும்
எந்தை என்தந்தை தந்தைக்கும் தந்தை
ஆகின்றான் குழந்தைக் கண்ணன் என்ன
சொல்வேன் எப்படிப் பாடுவேன் இவன்
குழந்தை அல்லன் குழந்தைகள் மனதிலும்
தன்னை ஆட்கொள்ள செய்யும் மாயன்
மாமாயன் மாதவன் யாதவ குல
திலகம் பார்த்தனுக்கு சாரதி நமக்கு
மறையாம் கீதை அளித்து வாழ்வுக்கு
வழி காட்டி தந்த இறைவன்
கண்ணனை சிதையில் வைப்போம் தொழுவோம்
கண்ணா கண்ணா என்று போற்றி
நல்வினை நமக்களிப்பான் அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-22, 4:25 am)
Tanglish : Kannan keetham
பார்வை : 115

மேலே