ஆகாயம் கீழே
சங்கமேஸ்வரி...
குன்னூர் குளிர் மேகங்களோடு
கைகோர்த்து விளையாடிய விவேகம்...
யூகலிப்டஸ் காற்றின்
கைபிடித்து நடந்த வேகம்...
கான்வென்ட் வகுப்புகள்
சொல்லித்தந்த ஆங்கிலம்...
மலைச் சாலைகளில்
துள்ளிக் குதித்து ஓடிய
பள்ளிப் பருவம்...
வசந்தங்களை வரங்களாகக்
கொண்ட உதகமண்டலம்..
உள்ளங்களை அள்ளி மகிழும்
பூக்களின் தேசம்...
கண்களுக்குள் கவிகள் பாடும்
தேயிலைத் தோட்டம்...
இவற்றால் திசைகள் எல்லாம்
சங்கரிக்கு கிழக்கின் வெளிச்சம்..
இவர் இருக்கும் இடமெல்லாம்
சாயங்கால நேரங்களிலும்
சூரியோதய உற்சாகம்...
நெய்தலை ஆளுமை செய்யும்
இந்த குறிஞ்சிப் பூ...
தொட்டபெட்டா சிகரம் போல்
என்றும் உயர்ந்து வாழ
வசந்த வாழ்த்து...
😀🌷💐🌺👏👍