இரத்த போளம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விழுந்திறந் தங்கிமிக வீங்குமுறு விக்க
மெழுந்துநிற்க வொட்டா விசுவோ - டழுந்தி
யுரைத்த தமரு(ம்)வலி யோடுமெதிர் நிற்கா(து)
இரத்தபோ ளத்தை எடு

- பதார்த்த குண சிந்தாமணி

இரத்த போளத்தினால் விழுந்து இரத்தங்கட்டி அதன்மேல் அதிகரித்த வலியோடு வீங்கும் வீக்கம், எழுந்து நிமிர்ந்து நிற்கமுடியாத பக்க நோய், மார்பு நோய் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-22, 12:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே