ஒளவைக்கு நெல்லியை

அறுவைச் சிகிச்சையால் பருவம் மாற்றிட
அறிவியல் முயன்றால் அரசியல் புகுந்தோர்
வெறியராய் மாறியே பெரியதாய் தம்மை
மறுவரை செய்து புதியதாய் மாறுவர்.

இறைத்தமிழ் செழிக்க ஒளவைக்கு நெல்லியை
நறுமையாய் தந்த அதியமான் ஒப்ப
சிறப்பு மிகுந்த ஆட்சியர் பிறப்பரோ
பிறழிலா நீதியில் தமிழை வளர்ப்பரோ

உள்ளது நல்லதாய் நிலைக்க தமிழரும்
கள்ளர் நல்லோர் சிறந்தோர் எவரென
தெள்ளத் தெளிவாய் காண்பது வேண்டும்
முள்ளையாய் செழித்ததை தலையாய் போற்றுவோம்

பற்றுவார் உண்டோ ஆற்றல் தமிழை
பெற்றவர் பெருமையில் உயர்ந்தது இறைதமிழ்
விற்றதை வாழவே இன்றைய அரசியல்
பற்றியே இயங்கி வெற்றியை அடையுது

தவத்தால் உலகை மழலையாய் ஈன்றே
உவகையால் பிறமொழி தந்த தாய்த்தமிழ்
புவன மூத்தவள் புகழைப் பாடிட
அவனி வாழுவோர் அனைவரும் இணைவோம்
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (21-Aug-22, 1:24 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 31

மேலே