சுயவிவரம்
சுயவிவரம்
நேரிசை வெண்பா
சுயவர் எழுத்தில் கதைக்கார் எழுதார்
சுயத்தை முகப்பினில் சொல்லார் -- பயமோ
மறைப்பன் புறஞ்சென்றான் மாறான் மறைக்கான்
கறையா மவர்தமிழும் காண்
புறஞ்சென்றான் = தமிழ் இனம் விட்டு வேறு இனம் மாறியவன்
மாறான். = தமிழனாய் தொடர்ந்து இருப்பவன்
மறைக்கான். = உண்மையை மறைக்கான்
கறையா மவர்தமிழும் == தமிழுக்கு விரோதமானது
எழுத்துத் தளத்தில் உறுப்பினர் ஆக நாலு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது
நாலு கேள்விககும் பதில் எழுதாது உண்மைப் பெயரையும் எழுத்து
KD BD முரா என்ற புரியாப் பெயரில் கண்டதை எழுதி வருவது வருந்தத்
தக்கது. அவர்கள் எல்லோரும் தாங்கள் நினைத்ததை எழுதி தமிழ்
மக்களை மொழியை கலாச்சாரத்தை இழிவு படுத்த நுழைந்துள்ள
விஷமி களாக கருத இடமளிக்கிறது. ஆகவே எழுத்து தளத்தில்
கேட்டுள்ள நான்கு கேள்விகளுக்கும் பதில் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன்.
அவர்களின் முழு உண்மைப் பெயரையும் தந்திட வேண்டுகிறேன்
.....