கரிய போளம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(‘ர்’ மேல் உயிர் உ ஏறி எதுகை ஆகிறது)

மார்புவலி வீக்கம் வயிற்றுவலி பங்கநோய்
வார்மேகக் கட்டியொடு மாவாதம் - பாருலகில்
நீளங்கை காலில் நிலைசூலை யுங்கறுத்த
போளந் தனைக்காணிற் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் மார்புவலி, வீக்கம், வயிற்றுவலி, பக்க நோய், மேகக் கட்டி, வாதம், கைகால் குத்தல் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-22, 8:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே