குரோசாணி ஓமம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெகுமூத் திரம்வாதம் வீரியநஷ் டம்புண்
உகுபேதி யுட்கடுப்பி னோடே - மிகுகரப்பான்
தீராக் கபம்இவைபோம் செய்யகுரோ சாணியென்றால்
வாரா மயக்கவுறு மால்

- பதார்த்த குண சிந்தாமணி

இது அதிமூத்திரம், வாதம், விந்து விரையம், வாதக்கழிச்சல், உடற்கடுப்பு, கரப்பான், கபம் இவற்றைப் போக்கும்; மயக்கத்தை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-22, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே