மற்போர்
மயங்காமல் வாயென்னிடம்
தொடங்குவோமொரு மற்போர்
தயங்காமல் கேள்ளென்னிடம்
தொடங்குமொரு சொற்போர்...¡
தீண்டாமல் அணைத்திடு
தீயாய்தகிக்குமென் தேகம்
இரவெல்லாம் கடத்திடுவோம்
மறைத்திடுமந்த மழைமேகம்...¡
தனிந்ததும் இச்சைக்
குடிகொள்ளும் இன்பம்,
கூடிக்களித்து வாழுகையில்
விலகிடுமனைத்து துன்பம்...¡
மாற்றம் உணர்ந்தாலது
மனதினில் தைக்கும்
பின்பற்றி வாழுகையில்
நல்விதை விதைக்கும்...¡
மற்போர் நிகழ்த்திடு
மாற்றம் விதைத்திடு
அன்பைப் பெற்று
அன்பையே வித்திடு...¡

