எனக்கொரு ஆசை

எனக்கொரு ஆசை ...
இறைவா நீயும்
நிச்சயம் நிறைவேற்றிடுவாயே,,,
நான் இறந்தபின்னால்
இறந்தவுடன்
யார்...யார்...என்னென்ன
பேசுகிறார்கள்....?
புதைத்தபின்
என்னென்ன புலம்புகிறார்கள்?
ஒரு வாரம்...
ஒரு மாதம் ....
ஒரு வருடம்....
கடந்தபின்
என்னை நினைத்து
ஏங்குகிறார்களா?
ஏசுகிறார்களா?
தாங்குகிறார்களா?
தாக்குகிறார்களா?
காதார கேட்டிட
எனக்கொரு ஆசை...
அல்ப ஆசைதான்.
நிராசைதான்.
இருந்தாலும் இறைவா
நிச்சயம் நிறைவேற்றிடுவாயே...
எனக்காக.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (22-Aug-22, 7:18 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : enakoru aasai
பார்வை : 1087

மேலே