என் சிந்தனை நீயே

அந்தி மயங்கும் நேரத்தில்
மங்கை உன்னை சந்தித்தேன்
சந்தித்த நேரத்தில் இருந்தே
எந்தன் சிந்தனையில்
உந்தன் நினைவே....!!

மரத்துக்கு மரம் தாவும்
குரங்கு போல்
எந்தன் மனம்
அங்குமிங்கும்
தாவி தாவி தவிக்குதே...!!

பறவையை போல்
பறந்திட துடிக்கின்றேன்
மொத்தத்தில்
பித்து பிடித்தவன் போல்
ஆகிவிட்டேன்..!!

என் பித்தம் தெளிய
மருந்து ஒன்று தந்து விடு
இல்லையென்றால்
போதி மரத்தை நாடி
சென்று விடுகிறேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Aug-22, 6:36 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en sinthanai neeye
பார்வை : 369

மேலே