பாவைக்காக காதல்

செஞ்சாந்து பொட்டுவச்சு
செங்கமளம் நீவரும்நிமிடம்
குருட்டுப் பயலோட
கும்மிருட்டும் விலகுமொருநிமிடம்...¡

உன் ஒத்தநடைக்கே
கும்மிருட்டு விலகுதே
ஒத்துகிட்டு நீயேவந்தா
நினைவே சிலுக்குதே...¡

மனமிரங்கி வந்து
என்னைச் சேர்ந்திடு
ஓலைக் குடிசையில்
விளக்கு ஏற்றிடு...¡

தெம்மாங்கு பாட்டுப்பாடி
கூடி மகிழ்வோமடி
ஆத்துமணலில் விதைவிதைத்து
அறுவடை செய்வோமடி...¡

உன்தேகம்பட்டா ஆத்துமணலிலும்
முப்போகம் விளையுமடி
முப்பந்தல்இசக்கியம்மன் கைபட்ட
நெல்லுமணிக்கு இணையடி...¡

ஈராறு புள்ளபெத்து
இன்பமா வாழ்ந்திடுவோம்
இடுகாடு செல்லும்வரை
இணைபிரியாம மகிழ்ந்திடுவோம்...¡

குச்சிஊணும் வயசிலயும்
கைபிடிச்சு நடந்திடுவோம்
உலகுக்கெல்லாம் நம்
காதலைச் சொல்லிடுவோம்...¡

எழுதியவர் : கவிபாரதீ (25-Aug-22, 10:10 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 591

மேலே