பிரியாத வரம் வேண்டும்
பிரியாத வரம் வேண்டும் !!
------------------
வரிசையாய்க் கிடைத்த வனிதையை என்றும்/
பிரியாத உறவுக்கு வரமொன்று வேண்டுவேன்/
பெருமரம் தழுவிடும் கொடியாய்த் தவித்தவள் /
பரிசென அடைந்தாள் பாரியின் தேரையே/
உயிரொடு ஊனொடு உறவாய்க் கலந்தவள் /
கயிற்றின் முடிச்சினில் காதலைப் பிணைத்தாள் /
முழுமையை வாழ்வினில் முழுதாய்த் தந்தவள்/
எழுமைப் பிறப்பும் இவள்தான் துணையே/
வல்லவன் இறைவன் வரமொன்று தந்தால் /
இல்லாள் இவளைப் பிரியாமைப் பெறுவேனே!!
-யாதுமறியான்.