சிந்தனைக் கவிதை
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*சிந்தனைக் கவிதைகள்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அன்று
உண்மையைக் காப்பாற்ற
அரிச்சந்திரன்
வெட்டியான்
வேலை பார்த்தான்....
ஆனால்
இன்றைய
அர்ச்சந்திரன்ளோ
தன்னைக்
காப்பாற்றிக்கொள்ள
உண்மையை
வெட்டியான் வேலை
பார்க்க வைத்துவிட்டார்கள்....!!!
🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
அப்துல் கலாம் ஐயா
அவர்களே !
நீங்கள் சொன்னது போல்
கனவுகள் நிறைந்த
மனம் இருக்கிறது
இப்போது.....
ஆனால்.... அதை
நிஜமாக்க
நம் நாட்டில்
களம் உருவாவது தான்
எப்போது என்று
தெரியவில்லை ஐயா ..?
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
கம்பனே..!
மீண்டு வந்து
கவிதை புத்தகம்
வெளியிட்டாலும்....
யாரும் வாங்கி
படிக்க மாட்டார்கள்
கவியரங்குகளில்
கத்தாத வரை.....!!!
🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉
தமிழன்
கரிகாலன்
கல்லணையைக்
கட்டினான் என்றே
காலமெல்லாம்
சப்பைக்கட்டு கட்டுகின்றனர்...
நீங்களும்
தமிழர்கள்தான்
என்ன கட்டினீர்கள் ?என்று
கேட்டால்
உணவு செல்லும்
வாயையும்.....
மலம் வரும்
வாயையும்.....
பொத்திக் கொண்டு
போகின்றார்கள்......?
*கவிதை ரசிகன் குமரேசன்*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔