தொடுவானம்

தூரத்தில் பார்க்கும்போது
தொடுவானம்
தொட்டுவிடும் உயரம்தான்...
கைக்கெட்டிவிடும் சாதனைதான்.
அருகில் சென்றால்தானே தெரியும்
தொடாத வானமென்று...
தொட முடியாத வானமென்று...
வாழ்வும் அப்படித்தான்
தோழா....
கற்பனையில் காணும்போது
சாதித்து விடலாம் என்கின்ற
மமதைதான் தோன்றும்.
வாழ்ந்து பார்கும்போதுதானே
தெரியும்
வாழ்வது எத்தனை கஷ்டமென்று...
எத்தனை சவால்களை கடப்பதென்று...
துவண்டு விடாதே
எழுந்து வா...
வாழ்ந்து பார்த்துவிடலாம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (29-Aug-22, 9:59 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : thoduvaanam
பார்வை : 193

மேலே