கத்தூரி பேதம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(க’ய்’ ‘ய்’ இடையின ஆசு)
கத்தூரி யைந்தாங் கரிகைதில கைகுளுந்தை
கைத்தபிண்ட கைநாய கைமுறையே – மொ’ய்’த்தசிவப்
பெள்ளுகொள்ளு கட்டி சிறிதுபரு மங்களென
விள்ளுமிவைக் கேகும் வினை
- பதார்த்த குண சிந்தாமணி
கத்தூரி, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைப்படும்; கரிகை சிவப்பு நிறமும் திலகை எள்ளின் உருவமும், குளுந்தை கொள்ளின் வடிவமும், பிண்டகை கட்டி கட்டியாகவும், நாயகை சிறிய பெரிய உருண்டைகளாகவும் இருக்கும்; இவை அசீரணப் பிரசவ மலினம் முதலிய நோய்களை விலளக்கும்