நினைவெனும் சிறையில் வாழ்கிறேன் 555

***நினைவெனும் சிறையில் வாழ்கிறேன் 555 ***
ப்ரியமானவளே...
நீயும் நானும் சேர்ந்து அந்திமாலை
கதிரவனை ரசித்து இருக்கிறோம்...
உன்வீட்டில் நீயும்
என் வீட்டில் நானும்...
ஒன்றாக பௌர்ணமி
நிலவை ரசித்து இருக்கிறோம்...
இரவெல்லாம் விண்மீன்களை
கணக்கெடுத்து உன்னிடம் சொன்னால்...
நீ எனக்கு முன்பே
கணக்கெடுத்து சொல்லி...
என்னிடம்
முத்தங்கள் வாங்குவாய்...
இன்பங்கள்
மட்டும் கொடுத்தவள் நீ...
துன்பங்கள்
கொடுத்து சென்றது ஏனோ...
ஒவ்வொரு
நொடியும் பல நினைவுகள்...
நினைவில்
வந்து செல்கிறது...
ஒவ்வொரு நொடியும்
உன்னை மட்டுமே...
என்
மனமும் நினைக்கிறது...
ஒருநொடியாவது நீ
என்னை நினைத்து பார்ப்பாயா...
என்னை சிரிக்க வைத்து
ரசித்து பார்த்தவள் நீ...
இன்று அழவைத்து என்னை
வேடிக்கை பார்க்கிறாய் நீ...
இன்று உன் நினைவெனும்
சிறையில் வாழ்கிறேன் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***