காதல் தோல்வி கவிதை

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

காதலித்த
நாங்கள்
இருவரும்
ஊர்வலத்தில்தான்
போய்க்கொண்டிருக்கிறோம்...
ஆம்....!
அவள்
கல்யாண ஊர்வலத்தில்...
நான்
கடைசி ஊர்வலத்தில்....

💕💕💕💕💕💕💕💕💕💕💕

பெண்ணே!
உன்னால்
இறந்ததை நினைத்து
நான்
வருத்தப்படவில்லை...
இன்னொரு முறை
இறப்பதற்கு
வாய்ப்பில்லையே! என்று
வருத்தப்படுகிறேன்....
ஆம்....!
எனக்காக
நீ
இரண்டு சொட்டு
கண்ணீர் விட்டாய் அல்லவா....?

💕💕💕💕💕💕💕💕💕💕💕

பெண்ணே.!
கடிதமாய் வந்தேன்
கிழித்துப் போட்டாய்...

தென்றலாய் வந்தேன்
சன்னலை சாத்தி வைத்தாய்....

ரோஜா மலராய் வந்தேன்
தூக்கி எறிந்தாய்....

மழையாய் வந்தேன்
குடைப்பிடித்தாய்......

மௌமாய் வந்தேன
கண்டபடி திட்டினாய்.....

பிணமாய் வருகிறேன்
கண்ணீர் வடிக்கின்றாயே...?

*கவிதை ரசிகன் குமரேசன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (4-Sep-22, 8:00 pm)
பார்வை : 110

மேலே