சிறகு நனைந்த பறவைபோல் தவிக்கிறேன் 555

***சிறகு நனைந்த பறவைபோல் தவிக்கிறேன் 555 ***
உயிரே...
மாலை பொழுதில் உன்னோடு
கை கோர்த்து நடக்க ஆசை...
நிசப்தமான இரவில் உன் மார்பில்
தலைசாய்த்து தூங்க ஆசை...
எப்படியெல்லாம்
உன்னிடம் காதலை சொன்னேன்...
நீயோ மௌனம் கலைக்காமல்
என்னை ஏங்க வைப்பது ஏனடி...
இருட்டு
அறைக்குள் உன் இதயத்தை...
நீ பூட்டி வைத்து
கொண்டது போதும்...
உன்
இதய அறையையும்...
உன் செவ்விதழ்களையும்
திறந்து சொல்லிவிடடி...
காலங்கள்
கடந்து செல்கிறது...
அறுபது வயதில் காதலுக்கு
சம்மதம் சொல்லிவிடாதே...
என் கனவில் நீ
வரும் போதெல்லாம்...
ஆயிரம் காதல்
காவியம் சொல்கிறாய்...
நேரில்
மட்டும் ஏனடி...
காதல் என்னும் வார்த்தைகளை
கூட சொல்வதில்லை நீ...
சிறகு நனைந்த
பறவைபோல தவிக்கிறேன்...
உன்னுடன் பேசும்போது
காதலனாகவா பேசவா...
ஒருதலை ரகமாக
பேசவா தெரியவில்லையடி...
இதழ்திறந்து சொல்லிவிடு தங்கி
கொள்கிறேன் எதையும் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***