வலையபட்டி கன்னியப்பன் கன்னியப்பன் - acrostic poem

க ருத்தாய் நானும் கவிதைகள் எழுதியு
ன் உள்ளம் கவர எண்ணி எண்ணியி
னி தாய்சொற் கள்கொண்டு இன்பமாய் விரைந்தேதா
ய ன்புடன் பலப்பல சொல்வே னேய
ப் போதுநீ மனம்கனிவாய் இனிதே நல்ல
ப திலை எனக்கே சொல்ல வேண்டுமெ
ன் றேவிழைவேன் நானுந்தன் நெடுநாள் காதலன்!
- வலையபட்டி கன்னியப்பன் கன்னியப்பன்!
An acrostic is a poem or other form of writing in which the first letter, syllable or word of each line, paragraph or other recurring feature in the text spells out a word or a message.
புகைப்படம்: Natural History Museum, London.