மாணவரும், மனைவியும்

அவர் ஓய்வு பெற்ற பொறியாளர்
என் நண்பருக்கு பார்வை குறைவு,
என்னிடம் அவர்தம் கண்ணைக் காட்ட விருப்பு,
சிலகாலம் நோயாளியை நான் பார்ப்பதில்லை
என் மாணவரிடம் காட்டச் சொன்னேன்;

அவரும் பார்த்துவிட்டார்,
அறுவை சிகிச்சையும் செய்து விட்டார்,
என்னிடமும் காட்டிவரச் சொன்னார் - நண்பர்
'ஆசிரியர் வீட்டில் சும்மாதானே இருக்கிறார்,
நோயாளியும் பார்ப்பதில்லையே’ என்றார்;

என் மனைவியோ எப்படிப் பார்ப்பீர்கள்!
’உங்களிடம் கருவியில்லையே’ என்றாள்,
என் மாணவரோ, ‘எங்கள் ஆசிரியர்க்கு
கண்ணைக் காட்டி விடுங்கள்! அவர்க்கு
ஒரு கைவிளக்கு போதுமே’ என்றார்;

அவர் ‘ஆம், நன்று! என்றால் போதும்
மகிழ்வேன் நான் மிகவும்’ என்றார்.
மாணவர்க்கு என் அறிவின் மேல் நம்பிக்கை!
என் மனைவிக்கு என் அன்பின் மேல் நம்பிக்கை!
என் நண்பருக்குக் கிடைத்தது பார்வையோடு வாழ்க்கை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-22, 9:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே