பெண் ஆகிய நான் தந்தையாகிய நீ

பெண் ஆகிய நான் தந்தையாகிய நீ

இவள் எனும்
நான்
உன் மார்பினில்
ஏறி மிதித்தாலும்

இவளுக்கு
கால் வலிக்குமே
கவலையுடன்
நோக்குபவன்

பெண் என்பதால்
உன் மீது
எப்பொழுதும் கண்

நையாண்டியாய்
அம்மா சொன்னாலும்

புன்னகையுடன்
என் தலையை
தடவி விளையாடும் நீ..

அழுகை ஆரம்பிக்கும்
முன்
துடித்து
போவாய் என்பதால்

கண்ணில் தூசி
உன்னிடம்
பொய்யாய்
சொல்லி தப்பிக்கும்
நான்

இன்று உன்
முகம் பார்த்து
கதறித்தான் அழுகிறேன்
கண்டு கொள்ளாமல்
உறங்குகிறாய்
கழுத்தில் மாலையுடன்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Sep-22, 10:57 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 52

மேலே