கொடுத்துண்டு வாழ்தலே குறையா வாழ்க்கையாம் – அறநெறிச்சாரம் 168

இன்னிசை வெண்பா

நொறுங்குபெய் தாக்கிய கூழார உண்டு
பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்;
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம்
வெறும்பேழை தாழ்க்கொளீஇ யற்று 168

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

நொய்யாற் சமைத்த கூழினை வயிறார உண்டு விளங்குகின்ற இரண்டு கோரப் பற்களோடு பன்றியும் வாழும்;

ஆதலால் அறத்தினைச் செய்து வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கையாகும்,

அறத்தினைச் செய்யாது தம்முடலைப் பேணி வாழ்வாருடைய இல்வாழ்க்கை யெல்லாம் தன்னகத்து ஒன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப் பூட்டிவைத்தல் போலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-22, 12:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே