செயலற்றார்க்குச் செய்யும் அறமே சிறப்பானதாம் – அறநெறிச்சாரம் 167

நேரிசை வெண்பா

அட்டுண்டு வாழ்வார்க்(கு) அதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி உடையவர் - அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை 167

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சமைத்து உண்டு வாழ்கின்ற இல்லறத்தார்க்கு விருந்தினராவார் எக்காலத்தும் சமைத்து உண்ணாத பெருமையினையுடைய துறவறத்தினரே யாவர்;

சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு அவ்வாறு வாழும் இல்லறத்தார் விருந்தினராவர் என்று சொல்லுதல் மலையுச்சியினின்றும் நிலமிசை வீழ்வார்க்கு அங்ஙனம் வீழா நின்றவர் துணையாவரென்று கருதுதல் போலாம்.

குறிப்பு:

அட்டுண்ணா மாட்சி – சமைத்தற்கு இயலாநிலை எனினுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-22, 12:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே