நவச்சாரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குன்மங் குடற்சூலை கொல்லும் மகோதரத்தை
வன்மையுறு கல்அடைப்பை மாற்றுங்காண் - சன்மக்
கவிச்சுமுத் தோஷம் கனவாதம் நீக்கும்
நவச்சாரம் மாதே நவில்
- பதார்த்த குண சிந்தாமணி
இது வயிற்றுவலி, குடல் குத்தல், பெருவயிறு, கல்லடைப்பு, புலால்வாசம், முத்தோடம், வாதம் இவற்றை நீக்கும்

