அப்பளக்காரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குடல்வாதஞ் சூலை கொடிதான வாதம்
அடல்புரியும் ஐயம் அறுக்கும் - நெடுவயிற்றின்
உப்பிசத்தி னோடே உயர்குன்ம நோயகற்றும்
அப்பிளக் காரம் அது
- பதார்த்த குண சிந்தாமணி
இது குடல்வாதம், சூலை, வாதம், ஐயம், வயிற்றுப்பிசம், வாதகுன்மம் இவற்றை நீக்கும்